சீனாவில் கனமழை நீடிப்பு- 16 பேர் பலி

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சீனாவில் கனமழை நீடிப்பு- 16 பேர் பலி
Published on

சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சாலைகள், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் மழை தொடர்பான விபத்துகளால் 9 பேரும், குவாங்டாங் மாகாணத்தில் 7 பேரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேரைக் காணவில்லை.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மழையால் ஏற்படும் சேதம் இன்னும் அதிகமாகும் என தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com