மரக்காணம் பகுதியில் பலத்த மழை - 3500 ஏக்கர் உப்பளம் பாதிப்பு

மரக்காணம் பகுதியில் கனமழை நீடித்து வருவதால் சுமார் 3,500 ஏக்கர் உப்பளங்களில் தண்ணீர் மூழ்கி உள்ளது. எனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மழை நீரில் மூழ்கி உள்ள உப்பளங்களை படத்தில் காணலாம்.
மழை நீரில் மூழ்கி உள்ள உப்பளங்களை படத்தில் காணலாம்.
Published on: 

மரக்காணம்:

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதியில் கன மழை நீடித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதியான அனுமந்தை, கீழ்ப்புத்துப்பட்டு, எண்டியூர், பிரம்மதேசம், நல்லாளம் பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது.

இன்று காலையும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டனர். மரக்காணம் பகுதியில் ஏராளமான கூலி தொழிலாளர்கள் உள்ளனர். தொடர் மழையால் அவர்கள் வேலை இல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடலோர பகுதியில் உப்பளங்கள் உள்ளது. இங்கிருந்துதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சிலநாட்களாக கனமழை நீடித்து வருவதால் சுமார் 3,500 ஏக்கர் உப்பளங்களில் தண்ணீர் மூழ்கி உள்ளது. எனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள்.

ஏற்றுமதிக்காக குவிக்கப்பட்ட உப்புகளும் மழையால் நாசமானது. இதனால் உப்பள அதிபர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com