டெல்லியில் ஆலங்கட்டி மழை - மக்கள் மகிழ்ச்சி

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
டெல்லியில் மழை நீரில் செல்லும் கார்
டெல்லியில் மழை நீரில் செல்லும் கார்
Published on

புதுடெல்லி:

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் பலத்த மழை பெய்ய உள்ளதாகவும், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. நொய்டா, குர்கான் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவானது.

நொய்டா, குர்கான் உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண மழை போல் தொடங்கிய மழை, சற்று நேரத்தில் ஆலங்கட்டி மழையாகப் பொழியத் தொடங்கியது. சில இடங்களில் பனிப்பொழிவும் காணப்பட்டது.

இந்த மழைப் பதிவான நேரத்தில் சாலையில் சென்றவர்கள், மழையை வீடியோவாக தங்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com