ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர் மாயமான வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர் மாயமான வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Published on: 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி மாயமானார். காணாமல் போனதற்கு முன்தினம் அவரை இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த விவகாரத்தில் காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்க கோரி பல்கலைக் கழக மாணவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், நஜீப் அகமது குடும்பத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று நீதிபதி சிஸ்டானி மற்றும் ரேகா பாலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு விசாரணைக் போலீசாரின்  நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என நஜீப் குடும்பத்தின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முறையிட்டார். இதனையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தால் திருப்தியடையாத நீதிபதிகள் இவ்வழக்கை சி.பி.ஐ வசம் மாற்றி உத்தரவிட்டனர்.

X