ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் ஒயிட்: ஹசில்வுட், பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் ஒயிட் சேர்க்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ், ஹசில்வுட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. #AUSvENG
ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் ஒயிட்: ஹசில்வுட், பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு
Published on

இதற்கான ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல்லுக்கு இடம்கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் லின் சேர்க்கப்பட்டிருந்தார். பிக் பாஷ் தொடரில் விளையாடும்போது கிறிஸ் லின்னிற்கு காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இதனால் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேகஸ்வெல்லிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல், கேமரூன் ஒயிட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசில்வுட்டுக்கு முதல் ஒருநாள் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2-வது போட்டியில் விளையாடுகிறார். பேட் கம்மின்ஸ் முதல் போட்டியில் விளையாடுகிறார். 2-வது போட்டியில் விளையாடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com