ஹசன் அலி 5 விக்கெட், இமாம் உல் ஹக் அறிமுக சதம்: இலங்கைக்கு எதிராக பாக். ஹாட்ரிக் வெற்றி

ஹசன் அலி சிறப்பாக பந்த வீசி ஐந்து விக்கெட்டும், இமாம் உல் ஹக் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தும் பாகிஸ்தானை ஹாட்ரிக் வெற்றி பெற வைத்தனர்.
ஹசன் அலி 5 விக்கெட், இமாம் உல் ஹக் அறிமுக சதம்: இலங்கைக்கு எதிராக பாக். ஹாட்ரிக் வெற்றி
Published on

டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் 208 ரன்னில் சுருண்டது. கேப்டன் தரங்கா அதிகபட்சமாக 61 ரன் எடுத்தார். ஹசன் அலி 10 ஓவரில் 34 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் இமான்-உல்-ஹக் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அவர் 125 பந்தில் 100 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இவர் முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் ஆவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com