அ.தி.மு.க பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

அ.தி.மு.க பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது என்று இணைப்புக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அ.தி.மு.க பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: முதல்வர் பழனிச்சாமி பேச்சு
Published on

சென்னை:

ஆறு மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு கட்டும் வகையில் அதிமுகவின் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இணைந்தன. 

இணைப்புக்கு பின்னர் பழனிச்சாமி பேசுகையில், எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் ஆத்மாக்கள் நிறைவு பெறும் வகையில் நாம் இணைந்துள்ளோம். அம்மாவின் கனவு நனவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நாம் இணைந்துள்ளோம்

பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இணைப்பு. இணைப்பு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக இயக்கத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக நானும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருப்பார்கள். வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு அதில் 11பேர் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், ”கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களாக பிரிந்திருந்தோம். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. 

அதிமுக இரு அணிகளும் இணையும் சூழலை ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்படுத்தி கொடுத்தது. அதிமுக அணிகள் இணைப்பு: என் மனதில் இருந்த பாரம் இன்றோடு அகன்றுவிட்டது. 

அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அ.தி.மு.க அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருக்கும். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com