

பண்டேஸ்லிகா லீக் தொடங்கிய காலத்தில் இருந்தே இடம்பிடித்து வந்த அணி ஹம்பர்க். இந்த அணி 2017-18 சீசனான தற்போதைய சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 33 ஆட்டங்கள் முடிவில் ஹம்பர்க் 28 புள்ளிகளும், வோல்ஃப்ஸ்பர்க் 30 புள்ளிகளும் பெற்றிருந்தது.
கடைசி லீக்கில் ஹம்பர்க் வெற்றி பெற்று, வோல்ஃப்ஸ்பர்க் தோல்வியடைந்தால் மட்டுமே 16-வது இடத்தை பிடித்து அடுத்த சீசனுக்கான பண்டேஸ்லிகாவில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹம்பர்க் 2-1 என புருஸியா மோன்செங்லாட்பச் அணியை வீழ்த்தியது. அதேசமயத்தில் வோல்ஃப்ஸ்பர்க் 4-1 என கோல்ன் அணியை வீழ்த்தியது. இதனால் ஹம்பர்க் அணி 17-வது இடம்பிடித்து பண்டேஸ்லிகாவில் இருந்து முதன்முறையாக வெளியேறியது.