ஹாலே ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #HalleOpen2018 #RogerFederer
ஹாலே ஓபன் டென்னிஸ் - ரோஜர் பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - அமெரிக்காவின் டென்னிஸ் குட்லாவை எதிர்கொண்டார். 

இதன் முதல் செட்டை பெடரர் 7-6 (7-1) என போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த செட்டையும் பெடரர் 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தொடர்ந்து நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் படிஸ்டா ஆகுட், குரோசியாவின் போர்னா கோரிக் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை எதிர்கொள்வார். #HalleOpen2018 #RogerFederer

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com