இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம்

இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
மெக்கா
மெக்கா
Published on

இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை மத்திய அரசு ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் அழைத்து சென்று வருகிறது.

இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன.

இதில் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும், மற்றவர்கள் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் செல்ல உள்ளனர். இதேபோல மும்பையில் இருந்து மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதேபோல 2 ஆயிரத்து 100 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com