கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ளுமாறு எச் ராஜா தினமும் அறிவுறுத்துகிறார்- ஆர்பி உதயகுமார்

கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ளுமாறு எச் ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
Published on

தமிழகத்தில் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து செயல்பாடு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ளுமாறு எச் ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 

பாஜகவுடன் தொடர்ந்த சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம். முக அழகிரி மவுனம் கலைத்தால்தான் திமுகவின் நிலைப்பாடு தெரியவரும். அரசியல் உள்நோக்கமின்றி எம்ஜிஆர், ஜெயலலிதா சுவரொட்டிகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com