குஜராத் சட்டசபை தேர்தல்: சோனியா, ராகுல், சித்து உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்கின்றனர்

குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் 40 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல்: சோனியா, ராகுல், சித்து உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்கின்றனர்
Published on

புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் 40 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, சட்டபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 86 பேர் கொண்ட இரு வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவோரின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது.

அந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர்  ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் அஷோக் கெலாட், குலாம்நபி ஆசாத், அகமது படேல், கமல்நாத், சச்சின் பைலட், ராஜ்பாப்பர், நவ்ஜோத்சிங் சித்து உள்பட மொத்தம் 40 பேர் அடங்குவர் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் பட்டியல் என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com