சவுராஷ்டிரா:
82 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். முதற்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்யவேண்டும். நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம். சவால் என்ற கேள்விக்கே இடமே இல்லை’’ என்றார்.