

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாநிலம் அகமதாபாத்- சென்னை சென்டிரல் இடையே புதியதாக ‘ஹம்சபர் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரெயில் சேவையை குஜராத் மாநிலம் உட்வடாவில் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு நேற்று தொடங்கிவைத்தார்.
முதல் ரெயில் சேவையை ‘ஹம்சபர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் (வண்டிஎண்:22920) வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.30
மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை இரவு 10.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
அதேபோல், மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்- அகமதாபாத் இடையே இயக்கப்படும் ‘ஹம்சபர்’ எக்ஸ்பிரஸ் ரெயில் (22919)
வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை
3.15 மணிக்கு அகமதாபாத்தை சென்றடையும்.