மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு

டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி
Published on

புதுடெல்லி:

நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம்  ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் கூட்டம் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்களின் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com