வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இந்திய வம்சாவளியினருக்கு மத்திய அரசு விருந்து

வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சுமார் 125 இந்திய வம்சாவளியினருக்கு ஜனவரி 9-ம் தேதி மத்திய அரசு விருந்து அளித்து கவுரவிக்கின்றது.
வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இந்திய வம்சாவளியினருக்கு மத்திய அரசு விருந்து
Published on

புதுடெல்லி:

வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சுமார் 125 இந்திய வம்சாவளியினருக்கு ஜனவரி 9-ம் தேதி மத்திய அரசு விருந்து அளித்து கவுரவிக்கின்றது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, பிஜி, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

அயல் நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஆண்டுதோறும் பர்வாசி பாரதிய திவாஸ் என்ற பெயரில் விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில், இந்திய வெளியுறவுத்துறை சார்பில் டெல்லியில் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி நடைபெறும் பர்வாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வெளிநாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சுமார் 285 இந்திய வம்சாவளியினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

இவர்களில் சுமார் 125 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறையின் அயல்நாடுவாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com