

சென்னை:
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 27 , 30-ம் தேதிகளில் 27 மாவட்டங்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதி பொது விடுமுறை விடப்படுகிறது.
இந்த மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.