ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுவை வருகிறார்: கவர்னர் கிரண்பேடி தகவல்

ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுவை வருவதால் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்தேன் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.
ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுவை வருகிறார்: கவர்னர் கிரண்பேடி தகவல்
Published on

புதுச்சேரி:

புதுவையில் வார இறுதி நாட்களில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்து வரும் புதுவை கவர்னர் கிரண்பேடி கதிர்காமம் கனகன் ஏரியை 2 மாதங்களுக்கு முன் பார்வையிட்டார். ஆகாய தாமரை மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரி கிரண்பேடியின் உத்தரவால் புதுப்பொலிவு பெற்றது.

இதனையடுத்து சீரமைக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி, நடைபாதை போன்ற வசதிகள் ஏரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கிரண்பேடி அர்ப்பணித்தார்.

இன்று காலை நடந்த இந்நிகழ்வில் பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த கிரண்பேடி ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுவை வருகிறார்.

எனவே, இது தொடர்பான ஏற்பாடுகள், சட்டம்- ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கலந்தாலோசித்தேன். பிரதமரின் நிகழ்ச்சிகள் குறித்து இறுதி செய்ய தலைமை செயலர் டெல்லி சென்றுள்ளார் என்று கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com