திருச்சி கல்லுக்குழியில் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி கல்லுக்குழியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சி:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுடலைவீரபாண்டியன்.இவர் திருச்சி டி.வி. எஸ்.டோல்கேட்டில்  உள்ள அரசு போக்குவரத்துபணி மனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக இவர் திருச்சி கல்லுக்குழி கமாரூதீன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சுடலை வீரபாண்டியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பதகராறு   ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சுடலை வீரபாண்டியன் கடந்த 6 மாதமாக வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவி கோபித்து   கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட் டிற்கு  சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சுடலை வீரபாண்டியன் நேற்று மாலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்துசுடலைவீர பாண்டியனின் தந்தை வெள்ளைசாமி கண்டோன் மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று சுடலைவீரபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்-இன்ஸ் பெக்டர் அழகர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com