அரசு கலை கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடக்கம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
Published on

சென்னை:

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு இந்த ஆண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. அரசு கலை கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசு கலை கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவுவதற்கு தமிழகத்தில் 38 சிறப்பு மையங்களை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது.  

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை பட்டப்படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை அவகாசம் அறிக்கப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத மாணவர்கள் 38 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

044-22351014 / 22351015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை அறியலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com