ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயன்தரும் வகையில் ரீ-எண்ட்ரியாகும் கூகுள் கிளாஸ்

கூகுள் கிளாஸ் திட்டத்தை வசைபாடியவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கூகுள் கிளாஸ் ரீ-எண்ட்ரியாகிறது. இம்முறை கூகுள் கிளாஸ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவுகிறது.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பயன்தரும் வகையில் ரீ-எண்ட்ரியாகும் கூகுள் கிளாஸ்
Published on

கூகுள் கிளாஸ் திட்டம் தோல்வியுற்றதாக நினைத்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கூகுள் கிளாஸ் மீண்டும் ரீ-எண்ட்ரியாகிறது. இம்முறை கூகுள் கிளாஸ் ஆட்டிசம் எனும் மூளை குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவ இருக்கிறது.

மாசசூசெட்ஸ் நகரை தலைமையகமாக கொண்டுள்ள நிறுவனம் ஆட்டிசத்திற்கென உருவாக்கியுள்ள புதிய மென்பொருள் கூகுள் கிளாஸ் உதவியுடன் இயங்குகிறது. பிரெயின் பவர் (Brain Power) என்ற நரம்பியல் சார்ந்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி முறையில் எம்பவர் மி என்ற மென்பொருளை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

இந்த மென்பொருள் ஸ்மார்ட்கிளாஸ் உதவியுடன் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் தங்களுக்கு தேவையான சமூக மற்றும் அறிவாற்றல் திறன்களை கற்பித்து கொள்ள முடியும். பிரெயின் பவர் நிறுவனம் இந்த மென்பொருளை கூகுள் கிளாஸ் தளத்தில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.


ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் போது கீழே குணிந்து பார்க்க வேண்டும் என்பதால் கூகுள் கிளாஸ் சாதனத்தை பயன்படுத்துவதாக பிரெயின் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அணியக்கூடிய சாதனங்களை பயன்படுத்தும் போது தலை நிமிரந்த நிலையிலும், கைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

மக்களை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக தொழில்நுட்பத்தின் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு மக்கள் எதிர்பாராத வகையில் நெருக்கமாக எடுத்து சென்று, ஒவ்வொருவர் மூளையில் உள்ள தனித்துவத்தை வெளிப்படுத்த முடியும் ன பிரெயின் பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நெட் சஹின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com