தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 952 அதிகரிப்பு

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு 952 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 3939 ரூபாய்க்கும், ஒரு சவரன் 31 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம்
தங்கம்
Published on

சென்னை:

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.29 ஆயிரத்து 880-க்கு விற்றது.

அதன்பின் விலை உயர்ந்து கொண்டு சென்று கடந்த மாதம் 27-ந்தேதி சவரன் ரூ.33 ஆயிரத்து 328-க்கு விற்று புதிய உச்சத்தை தொட்டது.

இதற்கிடையே சில நாட்களாகவே விலை சரிந்தபடி இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.984 சரிந்து ரூ.30 ஆயிரத்து 560-க்கு விற்றது. இதனால் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. சவரனுக்கு ரூ.952 அதிகரித்து ரூ.31 ஆயிரத்து 512-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.119 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 939 ஆக உள்ளது.

தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1200 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.39.30-க்கு விற்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com