திருவண்ணாமலை தீப திருவிழா - துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு

திருவண்ணாமலையில் நடைபெறும் தீப திருவிழாவுக்கு துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
Published on

சென்னை:

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com