கோபி அருகே கட்டில் கடையில் தீ விபத்து

கோபி அருகே கட்டில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25,000 மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
தீ விபத்து
Published on

கோபி:

கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). அப்பகுதியில் கட்டில் மரச்சாமான்கள் தயாரிக்கும் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கடையில் இருந்து புகை குபுகுபுவென வெளிவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

X

Maalai Malar
www.maalaimalar.com