உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்

உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது. #GlobalFirepowerlist2017 #IndianArmy #GFP2017
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
Published on

புதுடெல்லி:

உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் (Global Firepower (GFP) list 2017) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சில அடிப்படை கணக்குகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவை ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும். இந்த ஆய்வில் 133 நாடுகள் இடம்பிடித்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும், ஐந்தாவது இடத்தில் பிரான்சும் உள்ளன.

மேலும், அடுத்தடுத்த இடங்களில் பிரட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தில் உள்ளது. வடகொரியா முதல் பத்து இடங்களில் கூட வராரது அந்நாட்டின் ராணுவத்தின் நிலையை பிரதிபலிக்கிறது. #GlobalFirepowerlist2017 #IndianArmy #GFP2017 #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com