கிறிஸ்தவர்களின் சேவைக்கு அரசு தடையாக இருக்கக்கூடாது: ஜி.கே.வாசன் பேச்சு

கிறிஸ்தவர்களின் சேவைக்கு அரசு தடையாக இருக்கக்கூடாது தடங்கல்களை போக்கி அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் ஜி.கே.வாசன் கூறினார்.
கிறிஸ்தவர்களின் சேவைக்கு அரசு தடையாக இருக்கக்கூடாது: ஜி.கே.வாசன் பேச்சு
Published on

சென்னை:

த.மா.கா. சார்பில் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பி.ஜு.சாக்கோ வரவேற்றார். ராணிகிருஷ்ணன், பானு, அப்பாஸ், லாரன்ஸ், ரவிச் சந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

விழாவில் ஜி.கே.வாசன் பேசுகையில், நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். மத்திய- மாநில அரசுகள் அவர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கிறிஸ்தவ சமூகத்தினர் செய்து வரும் சேவைகளுக்கு அரசு தடங்கலாக இருக்க கூடாது. தடங்கல்களை போக்கி அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.

விழாவில் பாதிரியார்கள் ஆல்பர்ட் முத்துமாலை, தனிஸ்லாஸ், லூயிஸ், மாநில பொதுச்செயலாளர்கள் ஞானசேகரன், அனுராதா அபி, தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம்.பிரபாகர், ஜி.ஆர்.வெங்க டேஷ், டி.என்.அசோகன், ஜவஹர்பாபு, திருவேங்கடம், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார் மற்றும் நிர்வாகி கள் சுரேஷ்பாபு, சைதை நாகராஜ், கக்கன், துறை முகம் செல்வகுமார், கே.ஆர்.டி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.எஸ்.முத்து நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com