மராட்டிய ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் கில்லிஸ் சைமன் சாம்பியன்

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கில்லிஸ் சைமன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #GilliesSimon #Maharastraopen #Champion
மராட்டிய ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் கில்லிஸ் சைமன் சாம்பியன்
Published on

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் (தென்னாப்ரிக்கா) - கில்லிஸ் சைமனை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை கில்லிஸ் 7-6 என கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய கில்லிஸ் அந்த செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற கில்லிஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரான்சின் பைரீ-ஹியூஸ் ஹெர்பர்ட் - கில்லிஸ் சைமன் ஜோடி, நெதர்லாந்தின் ரோபின் ஹாஸ் - மாட்வே மிடெல்கூப் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் முதல் செட்டை நெதர்லாந்து ஜோடி 7-6 என கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இறுதியில் 7-6 என்ற செட்டை நெதர்லாந்து ஜோடி கைப்பற்றியது. இதன்மூலம் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com