ரூ.7,777 செலுத்தினால் ஏர்டெல் சலுகைகளுடன் ஐபோன் 7 (32 ஜிபி) பெற முடியும்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 7 வாங்க சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 7 மிக சுலபமாக வாங்கிட முடியும்.
ரூ.7,777 செலுத்தினால் ஏர்டெல் சலுகைகளுடன் ஐபோன் 7 (32 ஜிபி) பெற முடியும்
Published on

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் முயற்சியில் பாரதி ஏர்டெல் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வரத்தக தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானிற்கு போட்டியளிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஏர்டெல் சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக ஐபோன் விற்பனை செய்யப்பட்டாலும் படிப்படியாக மற்ற பிரான்டு ஸ்மார்ட்போன்களும் ஏர்டெல் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மொபைல் போன் உபகரணங்கள் மற்றும் இதர சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.  

தற்சமயம் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 விற்பனை நடைபெறுகிறது. அதன்படி ஐபோன் 7 (32 ஜிபி) வாங்குவோர் முன்பணமாக ரூ.7,777 மட்டும் தெலுத்தலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2,499 என 24 மாதங்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தலாம். ஐபோனிற்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தவணையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 30 ஜிபி டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் தளத்தில் ஐபோன் 7 முன்பதிவு செய்ததும், ஐபோன் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே விநியோகம் செய்யப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என டெலிகாம் சந்தையின் மூத்த வல்லுநரான நவ்கேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com