ஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

கொரோனா பரவல் தொடர்பாக பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடு
சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடு
Published on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் சமூக தொடர்புகளை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பிட்டவர்களுடன் மட்டும் தொடர்பில் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com