சமையல் கியாஸ் விலை ரூ.46.50 குறைந்தது

தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் விலை ரூ.46.50 குறைந்து உள்ளது.
சமையல் கியாஸ் விலை ரூ.46.50 குறைந்தது
Published on

சென்னை:

சர்வதேச மார்க்கெட்டை பொறுத்து சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

செப்டம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை கியாஸ் விலை அதிகமாக இருக்கும், மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரை சமையல் கியாஸ் விலை குறையும்.

அதன்படி கடந்த மாதத்தில் இருந்து இந்த மாதம் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் விலை குறைந்து உள்ளது.

சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் விலை ரூ.46.50 குறைந்து உள்ளது. இந்த மாதம் ரூ.699.50-க்கும் சமையல் கியாஸ் கிடைக்கிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) சமையல் கியாஸ் விலை ரூ.746 ஆக இருந்தது. மானியமாக ரூ.229.50 கிடைக்கிறது.

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் விலை ரூ.80.50 குறைந்து உள்ளது. கடந்த மாதம் ரூ.1387.50-க்கும் கிடைத்தது. இந்த மாதம் ரூ.1307 ஆக குறைந்து உள்ளது.

கியாஸ் விலை குறைந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் குறையுமா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com