காந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த காட்சி.
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த காட்சி.
Published on

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (அ.தி.மு.க.) மற்றும் கணபதிபுரம் வழக்கறிஞர் கே.தனராஜ் (பா.ம.க.) ஆகியோர் மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி முன்னிலையில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெ.வடிவேலு தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அவர்களை வரவேற்று சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், கணபதிபுரம் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com