தான்சானியா: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறிய விபத்தில் 57 பேர் பலி

தான்சானியா நாட்டில் விபத்துக்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 57 பேர் உயிரிழந்தனர்.
டேங்கர் லாரி எரிந்த காட்சி
டேங்கர் லாரி எரிந்த காட்சி
Published on

தான்சானியா நாட்டின் தலைநகரான டார் எஸ் சலாம் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோரோகோரோ என்ற இடத்தில் இன்று ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தது.

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து வெளியேறிய பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதை கொண்டு செல்வதற்காக பாத்திரங்கள் மற்றும் வாளிகளுடன் அருகாமையில் உள்ள மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதில் 57 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com