

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நேற்று பாரீஸ் நகரில் தொடங்கியது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, தரநிலை பெறாத ரஷியாவின் வெரோனிகா குடேர்மெட்டோவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை வோஸ்னியாக்கி 6-0 என எளிதில் வென்றார். பின்னர் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது செட்டை வெரோனிகா 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஆக்ரோஷம் காட்டினார். 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி வோஸ்னியாக்கியை வெளியேற்றினார்.