பிரெஞ்ச் லீக்-1: வீரரை தாக்கிய நடுவர் சஸ்பெண்ட்

ஸ்பெயின் நாட்டின் நடைபெறும் பிரெஞ்ச் லீக்-1 கால்பந்து தொடரில் வீரரை தாக்கிய நடுவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #Ligue1 #DiegoCarlos #ParisSaintGermain
பிரெஞ்ச் லீக்-1: வீரரை தாக்கிய நடுவர் சஸ்பெண்ட்
Published on: 

பிரான்ஸ் நாட்டில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் பிரெஞ்ச் லீக்-1. இந்த தொடரின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் நான்டெஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

அப்போது மைதான நடுவர் டோனி சாப்ரோன் மீது நான்டெஸ் வீரர் டியேகோ கார்லோஸ் வீரர் மோதினார். இதனால் நடுவர் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த கோபத்தில் கார்லோஸ் காலால் தடுத்து கிழே விழும் வகையில் தாக்கினார்.

பின்னர் கார்லோஸ்க்கு மஞ்சள் அட்டை வழங்கினார். ஏற்கனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்ததால் ரெட் கார்டு மூலம் வெளியேறினார்.

டிவி ரீபிளேயில் நடுவர் கார்லோஸ் மீது தாக்கியது தெரியவந்தது. இதனால் பிரெஞ்ச் கால்பந்து பெடரேசனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை நடுவராக செயல்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. #Ligue1 #DiegoCarlos

X