உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. #WorldCup2018 #FRACRO
உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு
Published on

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள குரோசியா அணிக்கு 188 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com