இத்தாலியில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி

இத்தாலியில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
லீவிஸ் ஹாமில்டன்
லீவிஸ் ஹாமில்டன்
Published on

இமோலா:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியின் இமோலா நகரில் நேற்று நடந்தது. 309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 32.430 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 9-வது வெற்றி இதுவாகும். அவரை விட 5.783 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.

13 சுற்று முடிவில் ஹாமில்டன் 282 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கி விட்டார். போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அதே சமயம் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை மெர்சிடஸ் அணி (479 புள்ளி) தொடர்ந்து 7-வது முறையாக உறுதி செய்திருக்கிறது. அடுத்த சுற்று போட்டி வருகிற 15-ந்தேதி துருக்கியில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com