அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: 66-வது முறையாக போல் நிலையை அடைந்து ஹாமில்டன் சாதனை

அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான தகுதிச்சுற்றில் ‘போல்’ நிலையை அடைந்து லெவிஸ் ஹாமில்டன் சாதனைப் படைத்துள்ளார்.
அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: 66-வது முறையாக போல் நிலையை அடைந்து ஹாமில்டன் சாதனை
Published on

பார்முலா ஒன் கார்பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெறும். ஒட்டுமொத்தத்தில் அதிக புள்ளிகள் பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார்.

நாளை அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று நேற்று மற்றும் இன்று நடைபெற்றது. இதில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்து ‘போல்’ நிலையை அடைந்தார். போல் நிலையை அடையும் வீரர் நாளைய பந்தயத்தின்போது முதல் நபராக புறப்படுவார்.

இந்த ‘போல்’ நிலை மூலம் ஹாமில்டன் இதுவரை 66 முறையாக ‘போல்’ நிலையை அடைந்துள்ளார். இதன்மூலம் 65 முறை ‘போல்’ நிலையை அடைந்திருந்த அய்ர்டோன் சென்னாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதுவரை நடைபெற்று கிராண்ட் பிரிக்ஸ் முடிவில் லெவிஸ் ஹாமில்டன் செபாஸ்டியானை விட 12 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com