

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை பற்றி ‘ஹிலாரி’ என்ற தலைப்பில் ஆவண தொடர் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஹிலாரியின் கணவரும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டன் மனம் திறந்து பேசி இருக்கிறார். வெள்ளை மாளிகையில் பணியாற்றிய 22 வயது பெண்ணான மோனிகா லெவின்ஸ்கியுடன் தான் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட விவகாரம் பற்றியும் அதில் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-
நான் செய்த காரியம் மிகவும் மோசமானது. நான் நினைத்தது போல அது இல்லை. நான் செய்த மிகவும் முட்டாள்தனமான செயல் அது. எல்லோருக்கும் வாழ்க்கையில் அழுத்தங்களும், ஏமாற்றங்களும், பயங்கரங்களும், அச்சங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. நான் பல்லாண்டு காலம் என் கவலைகளை மறக்க அது (மோனிகா லெவின்ஸ்கி விவகாரம்) வழியாக அமைந்தது.
இந்த விவகாரத்தை எங்கள் மகள் செல்சியிடம் சொல்ல வேண்டியநிலை வந்தது மிக மோசமான அனுபவம்.
இவ்வாறு அதில் கிளிண்டன் கூறி உள்ளார்.