

டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீக்ஷித் தனது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். இவர் தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார். தனது 30 ஆண்டு அரசியல் வாழ்க்கை குறித்து இந்த நூலில் எழுதியுள்ளார்.
'சிட்டிசன் டெல்லி: மை டைம்ஸ், மை லைஃப்' என்ற சுயசரிதை நூலை பிரபல புளூம்ஸ்பரி இந்தியா என்ற பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்த நூல் ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் 11-வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் போது வெளியிடப்படும்.