முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ஓய்வு பெறுகிறார்

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு 60 வயது பூர்த்தி ஆவதை தொடர்ந்து இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ஓய்வு பெறுகிறார்
Published on

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம மோகன ராவ், கடந்த 1957-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தார். தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர், ஆணையர் பதவிகளை வகித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி, முதல்-அமைச்சர் அலுவலகத்தின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்ட ராம மோகன ராவ், அதே மாதம் 8-ந் தேதியன்று தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதியன்று அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 31-ந் தேதியன்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழக இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com