புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் உடல்நலக்குறைவால் காலமானார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காலமானார்
Published on

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன்.  திமுகவை சேர்ந்த ஜானகிராமன் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராக இருந்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன்.  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com