தர்மபுரி: ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் காலணியுடன் கால் படம்

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் குடும்ப தலைவரின் படத்திற்கு பதிலாக ஒருவரது காலணியுடன் கால் படம் பதிவாகி உள்ளது.
தர்மபுரி: ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டில் காலணியுடன் கால் படம்
Published on

பொம்மிடி:

தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடும்பத் தலைவரின் படத்துடன் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மணியம்பாடி, போசிநாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ் சின்னசாமிக்கு குடும்பத்தலைவர் என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக ஒருவரின் காலணியுடன் கால் பதிவாகி இருந்தது.

இதை பார்த்து மகேஷ் சின்னசாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக வட்ட வழங்கல் துறையினரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com