காரிமங்கலம் அருகே பூ வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

காரிமங்கலம் அருகே பூ வியாபாரி விவசாயத்துக்கு பயன்படுத்தக் கூடிய குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரிமங்கலம் அருகே பூ வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ளது நாகனம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் பிரபு (வயது 25). பி.பி.ஏ.பட்டதாரி. இவர் ஊரில் பூ மொத்தம் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்த பிரபு விவசாயத்துக்கு பயன்படுத்தக் கூடிய குருணை மருந்தை எடுத்து குடித்தார். இதனால் வி‌ஷம் உடல் முழுவதும் பரவி வீட்டில் மயங்கி விழுந்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரபு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com