

பிளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டே எனப்படும் சலுகை விலை விற்பனை திருவிழா செப்டம்பர் 20-ம் தேதி துவங்கி செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பில்லியன் டே விற்பனையில் ஏற்கனவே அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் முதல் புதிதாய் அறிவிக்கப்பட்ட மாடல் வரை அனைத்து ரக ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடி வழங்குவது மட்டுமின்றி பிரீமயம் சாதனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஒப்போ, விவோ, சாம்சங், லாவா மற்றும் சோனி போன்ற பிரான்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் விற்பனைக்கு போட்டியளிக்கும் விதமாக அமேசான் தளத்திலும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி S7
இந்தியாவில் ஏற்கனவே ரூ.46,000க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி S7 பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.16,000 குறைக்கப்பட்டு ரூ.29,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 7 (32 ஜிபி)
இந்தியாவில் ரூ.56,200க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 7 (32 ஜிபி) மாடல் தற்சமயம் ரூ.17,201 வரை தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.38,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 4
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ சி பிளஸ்
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி) மாடல் ரூ.16,201 வரை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தள்ளுபடியில் ஐபோன் 7 பிளஸ் (128 ஜிபி) மாடலினை வாடிக்கையார்கள் ரூ.59,999க்கு வாங்க முடியும்.