ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து - 5 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து - 5 பேர் பலி
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுலை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண தொடர்பான சடங்குகள் நடத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலை ஓரமாக இருந்த டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 10-12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com