பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி - சிவகாசியில் சோகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெடி விபத்து
வெடி விபத்து
Published on

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் குருசாமி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com