திருச்சி: தீ விபத்தில் செவிலியர் உயிரிழப்பு

திருச்சியில் காபி போடுவதற்காக அடுப்பில் பால் வைத்து நெருப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த செவிலியர் பரிதாபமாக இறந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on: 

திருச்சி:

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (வயது 29) தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டில் சமையலறையில் காபி போடுவதற்காக அடுப்பில் பால் வைத்து நெருப்பை பற்ற வைத்துள்ளார். 

சிறிது நேரத்தில் தீ தீபிகாவின் சேலையில் பற்றியது. தீபிகா கூச்சலிவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரின் மேல் பிடித்திருந்த தீயை அணைத்தனர். உடலில் தீ காயங்கள் இருந்ததால் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தீபிகா இறந்தார். 

இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com