பின்லாந்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் ரோபோ

பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன.
பின்லாந்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் ரோபோ
Published on

பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன.

இங்கு இவை மொழி ஆசிரியராக உள்ளன. இவற்றால் 23 மொழிகளை புரிந்து கொண்டு கற்பிக்க முடியும். ஆனால் தற்போது இவை ஆங்கிலம், பின்னிஸ் மற்றும் ஜெர்மன் மொழிகள் மட்டுமே கற்றுத்தருகின்றன.

பள்ளி குழந்தைகள் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் திருப்தி தரும் பதில்களை அவை அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில் அதில் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டுமின்றி அவர்களுடன் சேர்ந்து ‘கங்னம்‘ ஸ்டைலில் நடனம் ஆடியும் மகிழ்விக்கின்றன. இந்த ரோபோவுக்கு ‘எலியாங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com