பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது

பெண்களுக்கான எட்டாவது பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது
Published on

1991 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. அவ்வகையில் எட்டாவது உலக கோப்பை தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே பங்கேற்கின்றன. இந்த உலக கோப்பையின் லீக் போட்டிகள் ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மேலும் நாக் அவுட் சுற்று ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரையிலும், காலிறுதி போட்டிகள் ஜூன் 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது

அரையிறுதி போட்டிகள் ஜூலை 2, 3 தேதிகளிலும், இறுதிப்போட்டி ஜூலை 7 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஃபிரான்ஸ்-கொரியா அணிகள் மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பை தொடரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுல்களை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com