டெல்லியில் விமானப்பணிப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாயங் சிங்வி கைது
புதுடெல்லி:
டெல்லியில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் அனிசியா பத்ரா என்ற பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது பெற்றோர், கணவர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். தனது மகளை கணவர் கொடுமை படுத்தியதாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனிசியாவின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனிசியாவின் கணவரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு காரணங்களால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம் என அவரது கணவர் மாயங் சிங்வி போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன்னதாக தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மாயங் சிங்விக்கு அனிசியா குறுந்தகவல் அனுப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமான பணிப்பெண் அனிசியா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Delhi

